போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது.! சென்னையில் போதை பொருள் விற்பனை படுஜோர்.!!

Senthil Velan
வெள்ளி, 19 ஜனவரி 2024 (21:35 IST)
சென்னையில் போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
 
பாரிமுனை பகுதியில் சுகுணா மோட்டார் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்க்கும்  திருவொற்றியூரை சேர்ந்த ராஜா,  மவுண்ட் ரோடு பகுதியில் ஏசி மெக்கானிக் வேலை பார்க்கும் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த தனுஷ்  ஆகிய இருவரும் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனை அடுத்து பட்டினத்தார் கோவில் சர்வீஸ் சாலை அருகே நேற்றிரவு நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் 3 கிராம் போதை பொருள் மற்றும் இருசக்கர வாகனம், ஒன்றரை அடி   நீளமுள்ள கத்தி இருப்பது தெரியவந்தது
 
இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த பொழுது அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருவொற்றியூர் சாத்தங்காடு பகுதியை சேர்ந்த சுஹேல் அகமது, காசிமேடு பகுதியை சேர்ந்த யாசின் ஆகிய இருவரை கைது செய்தனர். சுஹேல்  என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 கிலோ 800 கிராம் எடை கொண்ட மெத்த பெட்ட மைன் போதைப் பொருளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments