Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது 4 நாட்கள் விடுமுறை: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (08:10 IST)
மக்களவை தேர்தல், புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தென்மாவட்டங்களுக்கு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் இன்று ஒரே நாளில் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
 
இன்று அதிகாலை 4 மணி முதலே தாம்பரத்தில் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் குவிய தொடங்கியதால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிமீ தூரத்தில் கூட்ட நெரிசல் உள்ளது. மேலும் இவர்களுடன் வழக்கமாக அலுவலகங்களுக்கு செல்லும் சென்னைவாசிகளின் கூட்டமும் இணைந்து கொண்டதால் சாலை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகன நெருக்கடி உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு சென்று வருவதால் அவர்களுடைய கூட்டமும் இதில் இணைந்துள்ளது
 
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பேருந்துகள் மட்டுமின்றி கால் டாக்ஸிகள், ஆட்டோ ஆகியவற்றின் அதிக வருகையால் இன்னும் சில மணி நேரங்களுக்கு சென்னையின் பல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே ஏற்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments