Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா இல்லம் முன் போராட்டம்: 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (17:32 IST)
அமித்ஷா இல்லம் முன் போராட்டம்: 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது!
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கூட்டம் கூட்டமாக டிராக்டரில் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் பாஜக அலுவலகங்களை மூடுதல், பாஜக தலைவர்களின் இல்லங்கள் முன் போராட்டம் செய்தல், ரயில் மறியல் செய்தல், ஜியோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது
 
இந்த நிலையில் திடீரென விவசாயிகளின் போராட்டம் அமித்ஷா இல்லத்தை நோக்கி திரும்பியுள்ளது. அமித்ஷா இல்லம் முன் போராட்டம் செய்ய முயற்சித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments