Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோப்ப நாய்க்கு வைத்திருந்த கஞ்சாவை எடுத்து குதூகலம்! – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:39 IST)
புதுக்கோட்டையில் மோப்ப நாய் பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை திருடி புகைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு மோப்ப நாய்களை பராமரிக்க தனியாக போலீஸ்காரர்கள் உள்ளனர்.

மோப்ப நாய்களுக்கு மோப்ப பயிற்சி அளிப்பதற்காக காவல் அலுவலகத்தில் கஞ்சா வைக்கப்பட்டிருந்துள்ளது. அப்பிரிவில் பணியாற்றி வந்த சேவியர் ஜான்சன், பழனிசாமி மற்றும் அஸ்வித் ஆகிய மூன்று காவலர்கள் அந்த கஞ்சாவிலிருந்து அடிக்கடி கொஞ்சமாக எடுத்து புகைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கஞ்சா இருப்பை ஆய்வு செய்தபோது அது குறைந்திருந்ததால் மேலதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் இந்த மூன்று காவலர்களும் கஞ்சாவை திருடி புகைத்தது தெரிய வந்த நிலையில் அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments