Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுவன் மது போதையில் தள்ளாட்டம்: வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த 3 பேர் கைது

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (19:58 IST)
நாகப்பட்டினம் அருகே சீர்காழியில் 9 வயது சிறுவனை மதுபானம் குடிக்க வைத்த 3 பேரை காவல் துறையினர்கள் கைது செய்துள்ளனர்.
 

 
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர்கள் தினேஷ் (19) , அரவிந்த் (20) மற்றும் பதுபாலா (21).இவர்கள் மூவரும் அங்குள்ள ஒரு காட்டு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது 9 வயது சிறுவன் ஒருவன் அவ்வழியாக சென்றுள்ளான்.
 
மது அருந்திக்கொண்டிருந்த மூன்று பேரும், சிறுவனை அழைத்து வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர். இதனால், மதுபோதை தலைக்கேற தள்ளாடியபடியே வீட்டிற்கு சென்றுள்ளான்
 
சிறுவனின் தள்ளாட்டத்தைக் கண்ட அவரது தந்தை, அவனிடம் விசாரித்துள்ளார். பின்பு நடந்ததை அறிந்த அவர் இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவனை மது அருந்த செய்த மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments