Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்கள் ஸ்மார்ட் சிட்டி ஆகின்றன? - 3ஆவது பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்கள் ஸ்மார்ட் சிட்டி ஆகின்றன? - 3ஆவது பட்டியல் அறிவிப்பு
, புதன், 21 செப்டம்பர் 2016 (00:57 IST)
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
 

 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
 
இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப் பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 
 
தமிழ்நாட்டில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. மத்திய அரசு முன்னதாக வெளியிட்டு இருந்த முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சென்னை, கோவை ஆகிய நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆரும், நானும் முதல்வராக இருந்தபோது... : கருணாநிதி விளக்கம்