Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2435 பேருக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (19:59 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2435 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 731,942 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2435 பேர்களில் 669 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 31 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 2707பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 701,527 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 69,496 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,98,506 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments