Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 மதுபானக்கடைகளுக்கு உரிமம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (08:15 IST)
புதுச்சேரியில் தடையை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால் பாண்டிச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக வந்த புகார்களை அடுத்து அதுபோல விற்பனை செய்த கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

ஆனால் அப்படி சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்தும் மதுபானங்களை திருட்டுத்தனமாக எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அருணுக்குப் புகார் வந்தது. இதையடுத்து அவர் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சோதனையில் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 23 கடைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments