Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. முழு விவரங்கள்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (09:27 IST)
2024-2025 காலனி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பத்தாம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது என்பதும், அன்றைய தினம் தமிழ் மற்றும் இதர மொழி பாடங்கள் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏப்ரல் 2ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 4ஆம் தேதி ஆப்ஷனல் மொழி தேர்வு, ஏப்ரல் 7ஆம் தேதி கணிதம், ஏப்ரல் 11ஆம் தேதி அறிவியல், மற்றும் ஏப்ரல் 15ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெறும் என்றும், முதல் 10 நிமிடங்கள் கேள்வித் தாள் வாசிப்பதற்கும், அதன் பிறகு 5 நிமிடங்கள் வெரிபிகேஷன் ப்ராசஸ் மற்றும் 10.15 முதல் 1.15 வரை விடை எழுத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பதினொன்றாம் வகுப்புக்கு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்புக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம்.. உக்ரைன் தலைநகரில் தூதரகத்தை மூடிய அமெரிக்கா..!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி கடும் விமர்சனம்..!

டீச்சர் கொலை.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்: அண்ணாமலை

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments