Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
ஞாயிறு, 6 ஜூலை 2025 (13:00 IST)
ராமநாதபுரத்தில்  சாலையோரம் விளையாடிய 2 வயதுக் குழந்தை ஆட்டோ மோதி பலியான சிசிடிவி காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில்  உணவகம் நடத்தி வரும் ஜாகீர் உசேன் என்பவரின் குழந்தை வழக்கம்போல் தனது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில்,  திடீரென சாலை நோக்கி அந்த குழந்தை ஓடிய நிலையில்,  ஆட்டோ ரிக்‌ஷா மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
 
சிசிடிவி காட்சிகளில், அந்த குட்டிப் பெண் மெதுவாக சாலை நோக்கி தள்ளாடி செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அடுத்து நிகழவிருக்கும் ஆபத்தை அறியாமல் சென்ற போது ஆட்டோ முன்னோக்கி நகர, ஒரு நொடியில், அந்த வாகனம் குழந்தை மீது ஏறி செல்கிறது.
 
எதிர்திசையில் நடந்து வந்த ஒரு பெண் இந்த பயங்கரமான காட்சியைக் கண்டு, உடனடியாக அலறினார். அவரது அலறல் கேட்டு உஷாரான ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவந்து பார்த்தார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும், அங்கிருந்தவர்களும் கூடி, படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குழந்தையின் பெற்றோருக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments