Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை- - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (22:50 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் நாளில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று தமிழ் நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
 
அதில், தமிழத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments