Webdunia - Bharat's app for daily news and videos

Install App

195 உலக நாடுகளின் பெயர் மற்றும் எழுத்துக்கள் உச்சரிப்பு- 6 வயது சிறுவன் சாதனை!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (09:22 IST)
கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் 195 உலக நாடுகளின் பெயர் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை( spelling) வேகமாக உச்சரித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). ஒன்றாம் வகுப்பு பயிலும் லோகித்,பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார்.
 
வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் லோகித்  வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக அசாத்தியமாக ஒப்பித்து அசத்தி காட்டியுள்ளார்.இதனை கவனித்த  பெற்றோர்கள் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்று தர ஆரம்பித்தனர். 
 
குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஆங்கில எழுத்துகளையும்( spelling) சொல்லிக் தந்தனர். இதனையடுத்து உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை( spelling )உச்சரித்து அசத்தி காட்டினார். சிறுவனின் இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கியது. தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments