Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை..! 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை..!!

Senthil Velan
வெள்ளி, 22 மார்ச் 2024 (14:06 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், மூன்று படகு ஓட்டுனர்களுக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த 10 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தது. மூன்று விசை படகுகளை பறிமுதல் செய்தது.
 
இதனிடையே  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பதினொன்றாம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
 
இந்நிலையில் கைதான 22 பேரில் 19 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று படகு ஓட்டுனர்களுக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ALSO READ: தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு..! தூத்துக்குடிக்கு அறிவிப்பு இல்லை..!

மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments