Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
, வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (14:47 IST)
நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1126 போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் 19.2.2012 அன்றும் இரண்டாவது தவணை 15.4.2012 அன்றும் நடைபெறவுள்ளது.

முதலதவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 19.2.2012 அன்று சென்னமாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஐந்தரை இலட்சம் குழந்தைகளுக்கு போலியசொட்டுமருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டுமருந்து மையங்களஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து 19.2.2012 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி நலவாழ்வமையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவமையங்கள், தனியார் மருத்துவமனைகள், பொருட்காட்சி அரங்கம், இரயில்வநிலையங்கள், பேருந்து நிலையங்கள், சொட்டுமருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, புறநகர் பேருந்து நிலையங்களிலநடமாடும் சொட்டுமருந்து மையங்களஏற்படுத்தப்பட்டுளளது.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமகாரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்களஇந்த நாளில் அதாவது 19.2.2012 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலியசொட்டுமருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதமட்டுமின்றி 19.2.2012 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமலசொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil