Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (22:12 IST)
தமிழகத்தில் அடுத்த  3 மணி  நேரத்தில்  18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள போதிலும், சில நாட்களாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு திசைக்காற்றும் மேலடுக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றூடன் மணிக்கு 30-40 மீட்டர் வேகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்திலுள்ள, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை,  திருச்சி, மயிலாடுதுறை , திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  ஈரோடு, தேனி, தென்காசி, கிருஸ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், மதுரை, திருப்பூர், விருது நகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments