17 வயது சிறுவனுடன் இன்ஸ்டாவில் காதல்.. அம்மாவின் நகைகளுடன் வீட்டை வீட்டு ஓடிய 15 வயது சிறுமி..!

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (13:02 IST)
17 வயது சிறுவனை இன்ஸ்டாவில் காதலித்த 15 வயது சிறுமி அம்மாவின் நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டா மூலம் 17 வயது சிறுவனை காதலித்ததாகவும் இருவரும் இன்ஸ்டாவில் தங்களது காதலை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சிறுமியிடம் சிறுவன் ஐபோன் வாங்கி தா என்று கேட்டதாகவும் இதனை அடுத்து அம்மாவின் ஏழு சவரன் நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி அந்த நகைகளை விற்று சிறுவனுக்கு ஐபோன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நகைகளுடன் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் சிறுமியையும் சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
 
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் அம்மாவின் நகைகளை விற்று இருவரும் ஆளுக்கு ஒரு ஐபோன் வாங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments