Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னை மகளிர் கல்லூரியில் "16ம் ஆண்டு விளையாட்டு விழா"

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (21:56 IST)
அன்னை மகளிர் கல்லூரியில் " 16வது விளையாட்டு விழா" சிறப்பாக நடைபெற்றது.  அன்னை  ஸ்ரீ  அரபிந்தோ கல்வி அறக்கட்டளை தலைவர் தங்கராசு தலைமையுரையாற்றினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர்.சாருமதி சிறப்புரையாற்றினார்.

உடற்கல்வி இயக்குநர் திருமதி.கலா ஆண்டறிக்கை வாசித்தார். இளநிலை இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி. யாழினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட கபாடி சங்கத்தின் செயலாளர் திரு.சேதுராமன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம்  விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி ஊக்குவித்தார். 100M, 200M  , வாலிபால், எறிபந்து , கயிறு இழுத்தல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பளு தூக்குதல் போன்ற போட்டிகள் மாணவிகளுக்கும் , எறிபந்து, கயிறு இழுத்தல், மற்றும் கிரிக்கெட் போட்டி பேராசிரியர் களுக்கும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். 
 
இவ்விழாவில்  அன்னை   ஸ்ரீ  அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.மலையப்பசாமி,  செயலாளர் டாக்டர்.முத்துக்குமார், பொருளாளர் திரு.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், துணை முதல்வர், கலை புலத்தலைவர், பேராசிரியர்கள்,பயிற்றுனர் கார்த்திகேயன்,  அலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் இளங்கலை முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி பிருந்தா நன்றியுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments