16 மணி நேரமாக தொடர்ந்து பெய்யும் கனமழை.. வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நாகை மக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (11:00 IST)
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக 16 மணி நேரம் மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர் 
 
நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மிகுந்த சிரமத்துடன் அலுவலகம் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேலும் வாகனங்களும் மிகவும் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 சென்டிமீட்டர் மழை பாதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வேளாங்கண்ணியை அடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதிகளின் 12.3 சென்டிமீட்டர் மழையும் கடலூரில் 12 சென்டிமீட்டர் மழையும் பரங்கிப்பேட்டையில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து  மீட்பு நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments