Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 158 பேர் கைது: சென்னையில் பரபரப்பு

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (22:41 IST)
சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை செய்தும் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது 
 
குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பைக் ரேஸில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரே நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 158 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் கிறிஸ்மஸ் தினத்தின் முந்தைய நாள் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேசில் இவர்கள் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து போலீசார்கள் தகவல் அறிந்ததும் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

விஜய் கூட சேர்ந்தா நல்லா இருக்கும்.. நிர்வாகிகள் விருப்பம்! - ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை!

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments