Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை

Webdunia
புதன், 24 ஜூன் 2015 (07:31 IST)
ஓசூரில் சிறுமிகள் மாயமான வழக்கில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 15 வயது மகளை அவரது தந்தையே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.
 
பீகார் மாநிலம் போபத்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா. இவருக்கு வயது 42. இவரது மனைவி சரஸ்வதி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 4 மகன்கள் உள்ளனர்.
 
இவர்கள் ஓசூர் சிப்காட்டில் காமராஜ் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகளுக்கு 15 வயது. இவர் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
 
ராஜேஷ் சர்மா ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் ராஜேஷ் சர்மாவின் 2 மகள்களும் கடந்த 20 ஆம் தேதி காணாமல் போயினர். இது குறித்து சரஸ்வதி தேவி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் ராஜேஷ் சர்மாவின் 2 ஆவது மகள் வீட்டிற்கு வந்தார். அவரிடம் சிப்காட் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது, அந்த சிறுமி, தனது தந்தை ராஜேஷ் சர்மா அக்காவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறினார்.
 
மேலும், அடிக்கடி அவர் அப்படி செய்ததால் எனது அக்காள் 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், தந்தையின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் நாங்கள் இருவரும வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து மகளிர் காவல்துறையினர் ராஜேஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தினர்.
 
பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜேஷ் சர்மாவை கைது செய்தனர். மேலும், 2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!