சென்னையில் இருந்து வெளியேறிய 15 லட்சம் பேர்.. காலியாக இருக்கும் சாலைகள்..!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (17:49 IST)
தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து சுமார் 15 லட்சம் பேர் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் காலியாக உள்ளது. 
 
சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று இரவு லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர் 
 
இந்த நிலையில்  சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வியாழன் முதல் இன்று வரை சுமார் 12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்றுள்ள நிலையில்  சென்னையில் உள்ள அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments