Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத யாத்திரை எதிரொலி: நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (22:03 IST)
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரியை நாளை தமிழகத்தில் நுழையவுள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச்.23 வரை 144 தடை உத்தரவை அம்மாவட்டத்தின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பில் ராமராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவில் இருந்து தொடங்கி தமிழகத்தின் தென் மாவடத்தின் ஒருசில பகுதிகளுக்களில் செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியபோது, 'பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை விஷ்வ இந்து பரிஷத்தின் இந்த ரத யாத்திரை. இந்த ரத யாத்திரை தமிழகத்திற்குள் மீறி நுழைந்தால் கைது செய்து உத்தரப்பிரதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல்கட்டமாக தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரையில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்து உள்ளார். இதனால் ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments