Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 130 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய் கொள்முதல்… அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:24 IST)
பொங்கல் பரிசுத்தொகுப்பில் இந்த முறை ஆவின் நெய்யும் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெறும் 21 பொருட்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

அதில் பொங்கல் பையில் 100 மி.லி நெய்யும் சேர்க்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் இந்த நெய் பாட்டில்கள் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ஆவின் நிறுவனம் பொங்கல் தொகுப்புக்காக மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தை மேற்பார்வையிட்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் ’பொங்கல் தொகுப்புக்காக தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் 130 கோடி ரூபாய்க்கு நெய் கொள்முதல் ஆர்டர் வழங்கியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments