Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13,320 போலீ‌ஸ் நியமனம் - தபால் நிலையங்களில் ‌வி‌ண்ண‌‌ப்ப‌ம்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2012 (13:21 IST)
WD
தமிழக போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு துறைக்கு 13,320 காவலர் களை த‌மிழக அரசு தேர்வு செய்ய உ‌ள்ளது. இத‌ற்கான விண்ணப் ப‌ங்க‌ள் தபால் நிலையங்களில் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், மாநகர, மாவட்ட சேமநல படைப்பிரிவுக்கு ஆண்கள் 4,284 பேரும், பெண்கள் 1,835 பேரும் என மொத்தம் 6,119 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆண்கள் 6,033 பேரும், பெண்கள் 56 பேரும் என, மொத்தம் 6,099 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இரண்டாம்நிலை சிறைக்காவலர்கள் ஆண்கள் மட்டும் 377 பேரும், தீயணைப்போர் 791 பேரும் மொத்தம் 13,320 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

12,152 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில், 5 சதவீத பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக நிரப்பப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மொத்தகாலி பணியிடத்தில், 10 சதவீதம் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்த வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது தகுதி, 1-7-2012 அன்று 18 வயது நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். பி.சி, எம்.பி.சி. பிரிவினர் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 29 வயதுவரை விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

இதற்கான விண்ணப்பபாரங்கள் தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பாரங்களை, ஏப்ரல் 23-‌ ம ் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், சென்னை-2 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜுன் மாதம் 24-‌ ம் தேதி நடைபெறும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments