12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு: மாணவர்கள் உற்சாகம்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (20:49 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 61  ஆயிரம்  மாணவ மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் இந்த தேர்வின் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அறிவித்தபடி அதே தேதியில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.,
 
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, "ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது " என்றும் தெரிவித்தார். தேர்வு முடிவு வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்