பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: மாணவிகள் அதிக தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: மாணவிகள் அதிக தேர்ச்சி!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (10:27 IST)
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஒரு சில மாற்றங்களை செய்தது தமிழக அரசு. இதுவரை ரேங்க் அடிப்படையில் வெளியிடப்பட்ட முறை இந்தமுறை கைவிடப்பட்டது.


 
 
இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்களை விட 62843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
 
இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.  முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாமல் தேர்வு முடிவு வெளியானது.
 
82.3 சதவீதம் மாணவர்களும், 94.5 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் தேர்ச்சியை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. அதில் 292 அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
 
கணிதம் பாடத்தில் 3656 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 187 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 1123 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 1647 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 8301 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கிராம் தங்கம் விலையில் 1 கிலோ மல்லிகைப்பூ விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

இலங்கையை நோக்கி செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

வங்கி கணக்கு ஆரம்பித்து ரூ.5000க்கு விற்ற நபர் கைது.. அதே கணக்கை வைத்து ரூ.15 லட்சம் மோசடி..!

துணைவேந்தர் குறித்து அவதூறு புத்தகம்.. பல்கலை பேராசிரியர்களே செய்த விபரீத செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments