Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை தேர்த்திருவிழாவில் பயங்கர விபத்து: 12 பேர் பரிதாப பலி!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (07:22 IST)
தஞ்சாவூரில் தேர் திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர விபத்தில் 12 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது
 
இந்த தேர் வீதிகளில் உலா வந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியானதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments