11ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (12:17 IST)
தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது என்பதையும் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும்  கரூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது
 
இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம் என்றும், 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை எழுதலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
இதனால் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்கள் மீண்டும் 11ஆம் வகுப்பிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், கல்லூரிகளில் அரியர் போல் 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை படித்து தேர்வு எழுதலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை!.. பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் திமுக!...

ஓட்டுக்கு காசு கொடுக்கலாம்!!. டிக்கெட் அதிகமா வித்தா ஊழலா?!., விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான்!...

அதிமுக, திமுக, தவெக.. மூனு பக்கமும் காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. நடப்பது என்ன?...

விமான விபத்தில் சிக்கிய அஜித் பவார் மரணம்!.. பாஜகவினர் அதிர்ச்சி

அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது!.. அதிர்ச்சி செய்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments