Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! – பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (11:09 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்புக்கான தேர்வுகள் இன்று முதல் தொடங்கும் நிலையில் பள்ளிகளுக்கு தமிழக தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 3016 தேர்வு மையங்களில் 8,30,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகள் எழுதுகின்றனர்.

இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 வரை நடைபெறும். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்துவர ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்ய முயன்றால் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுத்தவிர மாணவர்கள் முறைகேடு செய்ய பள்ளி நிர்வாகம் உதவி செய்தார் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Curved Display-உடன் வெளியானது Tecno Pova Curve 5G! - விலை மற்றும் சிறப்பம்சங்கள் விவரங்கள்!

அதிபர்னா இஷ்டத்துக்கு வரி போடுவீங்களா? ட்ரம்ப் விதித்த உலக நாடுகள் வரிக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments