Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா எண்களை அறிவித்த தமிழக அரசு!

Webdunia
வியாழன், 20 மே 2021 (11:39 IST)
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகள் காரணமாக வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பதும், இ-பதிவு  இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற காரணத்திற்காக செல்வதாக பலர் பொய் கூறி பதிவு செய்வதால் திருமண அழைப்பிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் யாருக்கு திருமணம் எப்போது திருமணம் போன்ற விவரங்களை இ-பதிவில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் இனி இ-பதிவு குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. 1100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் டயல் செய்து இ-பதிவு குறித்த தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு செய்யும் பொது மக்கள் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்