11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு 27 ஆண்டு சிறை..!

Mahendran
செவ்வாய், 30 ஜூலை 2024 (12:09 IST)
திருவாரூரில் 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக பொருள்கள் வாங்கிக் கொண்டு தனது தாயுடன் வீட்டுக்கு 11ஆம் வகுப்பு மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது  அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், மாணவியை கடத்திச் சென்று தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜ்குமார் மீது போக்சர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இது குறித்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் ராஜ்குமார் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏற்கனவே தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்