Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் பரிதாப பலி: செங்கல்பட்டில் பரபரப்பு

Webdunia
புதன், 5 மே 2021 (07:04 IST)
டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
செங்கல்பட்டு மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும் இதன் காரணமாக ஆக்சிஜன் இல்லாமல் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருவதாகவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிந்து உடனடியாக ஆக்சிஜனை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்! - என்ன நடந்தது?

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments