10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
புதன், 8 மே 2024 (16:44 IST)
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தேர்வில் 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அடக்க கட்டமாக 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாக என்பது குறித்து அறிவிப்பை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக 10-ம் வகுப்பு பொது தேர்வு நாளை மறுநாள் அதாவது மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் செய்து முடித்து விட்டன என்றும் தற்போது கம்ப்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வு முடிவை காண இந்த தேர்வு எழுதிய ஒன்பது லட்சம் மாணவர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments