Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா குணமடைய 1008 பேர் முடி காணிக்கை

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:46 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப 1008 பேர் முடி காணிக்கை செலுத்தவுள்ளனர்.


 

 
தமிழக முதல்வர் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவரது உடல்நலம் குணமடைய அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தீச்சட்டி, மண்சோறு போன்ற பிராத்தனைகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவரங்கம் அதிமுகவினர் சார்பில் திருவரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் 1008 தொண்டர்கள் முடிகாணிக்கை செலுத்தவுள்ளனர்.
 
இதற்காக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பெரிய அளவில் பேனர் வைத்து அழைப்பு விடுத்துள்ளனர், திருவரங்கம் அதிமுக கழகத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments