Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு வரவழைக்க முடிவு!!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (08:41 IST)
தற்போது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு. 

 
இந்த வருடம் தொடக்கத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படு வருகிறது.
 
சமீபத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் முதல்வர் அறிவிப்பின்படி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 
 
முன்னதாக 50% ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில்  ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தற்போது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments