Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் காங்கிரஸின் தொகுதிகள் எவை ? - கே எஸ் அழகிரி தகவல்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (11:24 IST)
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவை எந்த தொகுதிகள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது இரண்டு மாதங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டு விட்டது. அதன் பின்னர் சமீபத்தில் காங்கிரஸுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது . ஆனால் இன்னும் அவை எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

ஒருவேளை திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கியபின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதைத் தீர்மானிக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் தேமுதிக உடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிப் பெறவில்லை. அதனால் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து காங்கிரஸின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.  இதுகுறித்து நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய அவர் ‘ தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிக்கானப் பட்டியலைத் தயாரித்துள்ளோம். திமுக மற்றக் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

திமுக விசிக உள்ளிட்ட கட்சிகளோடு தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் காங்கிரஸுக்கான தொகுதிகள் எவை என்ற விவரம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments