35 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா: லாக்டவுன் காரணமா?

Webdunia
திங்கள், 24 மே 2021 (19:54 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 34,867 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 34,867 பேர்களில் 4,985 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 404 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 20,872 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 27,026 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 15,54,759 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,68,194 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 264,69,766 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments