Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ‌மீனவ‌ர்க‌ள் சிறை‌ பிடிப்பு - 3 பே‌ர் ‌மீது கட‌த்த‌ல் வழ‌க்கு - இலங்கை அட்டூழியம்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2012 (10:46 IST)
ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 10 ‌மீனவ‌ர்களை ‌சிறை‌ப்‌பிடி‌த்து‌ள்ள இல‌‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், 3 பே‌‌ர் ‌மீது கடத்தல் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செ‌ய்து‌ள்ளன‌ர். இ‌ந்த செய‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்‌பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை தேடி மற்றொரு விசைப்படகில் 5 மீனவர்கள் நேற்று மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் முதலில் சென்ற 5 மீனவர்களுடைய படகு பழுதானதால் நடுக்கடலில் தவித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனிடையே இவர்களை தேடிச்சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு அவர்களுடைய படகுகளை கைபற்றியதுடன் அவர்களை தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த மீனவர்கள் பாலமுருகன், மாரி, தீபன் ஆ‌கிய மீனவர்க‌ள் தனுஷ்கோடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கட‌த்த‌ல் பொரு‌ள் வை‌த்‌திரு‌ந்ததாக கூ‌றி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது மொத்தம் 13 பேர் இலங்கை கடற்படை வசம் சிக்கியுள்ளனர்.

கட‌ந்த ஒரு மாத‌த்‌தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்களை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் கு‌றிவை‌த்து தா‌க்குத‌ல் நட‌த்‌தி வ‌ந்தன‌ர். த‌ற்போது, அவ‌ர்களை ‌சிறை ‌பிடி‌க்க தொட‌ங்‌கியு‌ள்ள த‌மிழக ‌மீனவ‌ர்‌க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments