Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 5 ஆம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:36 IST)
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன.
 
ஆனால் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி வரை என மாற்றியமைக்க வேண்டுமென முன்னர் கோரிக்கை விடப்பட்டது .
 
இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments