Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் – வெண்கலம் வென்றோருக்கு தலா ரூ.1 கோடி பரிச!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (12:49 IST)
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு.


சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இந்தியாவில் செஸ் ஒலிம்பியட் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கணிசமான அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா வெகுவாக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் வெண்கல பதக்கம் வென்றார். குகேஷ் மற்றும் நிகள் சரின் தங்க பதக்கமும், எரிகேசி அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணி, பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடந்த 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது என்று முதலமைச்சர் பெருமிதம் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments