2000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (19:35 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,990 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,61,587 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,990 பேர்களில் 175 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 26 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 34,102 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 2,156 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 25,06,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,58,646 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 376,04,794 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments