Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“விஜயகாந்த் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்”

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:21 IST)
விஜயகாந்த் சட்டப்பேரவைக்கு வராமல் ஏன் பயந்துக் கொண்டிருக்கிறார் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். இதற்கு எங்கள் தலைவர் பயந்தாகொள்ளி அல்ல வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார் என்று பண்ருட்டி ராமசந்திரன் பதில் அளித்தார்.

இதுக்குறித்து சுவாரசியமான விவாதம்...

சட்டப்பேரவையில் இன்று நடந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் பேசினார்.

அப்போது, அஞ்சாத நெஞ்சத்துக்கு சொந்தக்காரர் எங்கள் விஜயகாந்த்தை வணங்கி எனது உரையை தொடங்கிகிறேன் என்றார்.

இதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசும்போது, உறுப்பினர் பேசும்போது அவரது கட்சித்தலைவரை அஞ்சாத நெஞ்சத்துக்கு சொந்தக்காரர் என்று புகழ்கிறார். அப்படி அஞ்சாத் நெஞ்சம் கொண்டவராக இருந்தால் அவர்களது கட்சித்தலைவர் சட்டமன்றத்துக்கு வருவதற்கு ஏன் அஞ்சி கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேமுதிக கொரடா விசி சந்திரகுமார், இடைநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்பு வரவேண்டியுள்ளது. அதனால் தான் , பேரவைக்கு வராமல் இருக்கிறார் பயமொன்றுமில்லை என்றார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, வழக்கு ஒருபுறம் நடக்கட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்கலாமே என்ரார்.

அப்போது சமக தலைவர் சரத்குமார் பேசும்போது, வழக்கு ஒருவேளை 5 ஆண்டுக்கு நிலுவையில் இருந்துவிட்டால் அதுவரை விஜயகாந்த் அவைக்கு வரவே மாட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, அதிமுகவினர் (ஜெயலலிதா உட்பட) சிரித்தனர்.
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், நம்பி வாக்களித்த மக்களின் உரிமைக்காக போராட அவைக்கு விஜயகாந்த் வரவேண்டாம என்றார்.

இதெயெல்லாம் கேட்டு கொதித்தெழுந்த எதிர்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், ஒருவர் அவைக்கு வரவில்லையென்ரால் அவர் பயந்து கொண்டு வராமல் இருக்கிறார் என்று அர்த்தமில்லை. முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வரும் பல நாட்கள் அவைக்கு வராமலேயே இருந்துள்ளனர். வேண்டிய சமயங்களில் மட்டுமே அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர். எங்கள் தலைவர் விஜயகாந்த் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார். என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments