பிரபல டாக்டர் கமலா செல்வராஜ் வீடு, மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த நடிகர் ஜெமினிகணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ். பிரபல டாக்டரான இவரது வீடு, மருத்துவமனைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் 6 கொண்ட அதிகாரிகள் இந்த சோதனை நடந்து வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் உள்ள இவரது ஜி.ஜி. மருத்துவமனையிலும் 6 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டு வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது டாக்டர் கமலா செல்வராஜ் வீட்டில் இல்லை. அவரை உடனடியாக வீட்டிற்கு வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வருமான வரி ஏய்ப்பு எதுவும் செய்துள்ளாரா என்பது குறித்து கமலா செல்வராஜியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.