பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மரணம்
, புதன், 20 ஜூன் 2012 (12:30 IST)
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜானி, கமல்ஹாசன் நடத்த சிவப்பு ரோஜாக்கள் உள்பட 75 மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கே.ராஜகோபால் என்ற கே.ஆர்.ஜி. சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.இந்த நிலையில் இன்று கே.ஆர்.ஜி.க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கே.ஆர்.ஜி., ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்கு மனைவி, மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா உலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சென்னை, தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கே.பாலசந்தர், ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு உள்ளிட்ட திரை பிரபலங்கள் கே.ஆர்.ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.