தாளவாடி பகுதியில் இம்மாதம் 28ம் தேதி வரை 144 தடை சட்டம் அமுலில் இருப்பதால் இவர்கள் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. முத்துசாமி மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜன் தலைமையில் பண்ணாரியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பண்ணாரி சோதனை சாவடி அருகில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி ஆர்ப்பாட்டம் நடத்தி நடைபயணத்தை தொடங்கினர். நடைபயணத்தை தொடங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.