Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நில ‌வி‌‌ற்பனை‌யி‌ல் முறைகேடி‌ல்லை: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

‌நில ‌வி‌‌ற்பனை‌யி‌ல் முறைகேடி‌ல்லை: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (17:56 IST)
பொது‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காக‌தத‌மி‌ழ்நாடு ‌வீ‌‌ட்டவச‌தி வா‌ரிய‌மஒது‌க்‌கீடசெ‌ய்து‌ள்ள ‌நில ‌வி‌ற்பனை‌யி‌லமுறைகேடஏது‌மி‌ல்லஎ‌ன்றத‌மிழஅரசு ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅரசவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜன் அனுப்பிய கடிதம் இன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

அதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்த பள்ளிக்கூடம், பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களை ஜுலை முதல் வாரத்தில் டெண்டர் மற்றும் ஏல முறையில் விற்பனை செய்யப் போவதாக அறிக்கை வெளியாகி உள்ளது என்றும், இது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களில் குடியிருப்பு மனைகள் போக அந்த குடியிருப்புகளுக்குத் தேவையான வணிக மனைகள், பள்ளி மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள் ஆகியவற்றிற்காக விலை நிர்ணயம் செய்யப்பட்டு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மற்றும் பொது ஏலம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மனைகள் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தில் எந்த உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த உபயோகத்திற்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பள்ளி மனைகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, மழலையர் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றை நடத்துவதற்காக மட்டுமே விளையாட்டு மைதானத்துடன் ஏலத்தின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல முறை கடந்த 20 ஆண்டு காலமாக வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மற்றும் இதர இடங்களில் 1,384 வணிக மனை, பள்ளி மனைகளில் ஓரிரு இடங்களில் விளையாட்டு மைதானத்துடன் இணைந்துள்ள மனைகளும் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

வரதராஜன் குறிப்பிட்டுள்ளதைப் போல எந்த பூங்காவிற்குரிய இடமும் விற்பனைக்கு விளம்பரம் செய்யப்படவில்லை, பள்ளி மனைகளைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ளவாறு பொது ஏலத்தின் மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil