Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. கு‌றி‌த்து ராமதா‌சி‌‌ற்கு ஏ‌ன் கவலை? : கருணா‌நி‌தி கே‌ள்‌வி!

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (18:58 IST)
த ி. ம ு.க. குறித்து ப ா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கவலைப்படவேண்டிய அவசியம் என்ன. கூட்டணியில் இல்லாதபோது, த ி. ம ு.க. வுக்கு ஓரிடம் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும் என்று த ி. ம ு.க. தலைவரும் த‌மிழக முதல்வருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட ்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், " தமிழகத்தில் தற்போது சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால், த ி. ம ு.க. வுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்று ப ா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

த ி. ம ு.க. கூட்டணியில் தான் ப ா.ம.க. இல்லையே, அப்படி இருக்கும் போது த ி. ம ு.க. வுக்கு ஓர் இடம் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி அவர் (ராமதாஸ்) ஏன் கவலைப்படுகிறார்? சட்டப் பேரவைத் தேர்தல் ஒன்றும் தற்போது நடக்கப் போவதில்லை. இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது.

2011- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில்தான் ப ா.ம.க. தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வரப் போகிறது என்று ஏற்கெனவே அவர் (ராமதாஸ்) சொல்லியிருக்கிறார். அவர் வரட்டும்; தமிழகத்தை ஆளட்டும் என்று பெருந்தன்மையோடு கூறியிருக்கிறேன். அதே பெருந்தன்மையோடுதான் அவரும் த ி. ம ு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று சொல்லியிருக்கிறார் போலும்.

மின் வெட்டு பிரச்னை குறித்து ஒவ்வொரு நாளும் நான் எந்த அளவுக்கு அக்கறை காட்டி வருகிறேன் என்பதை பகுதி நேர அரசியல்வாதிகள் அறிய மாட்டார்கள். மாதக் கணக்கில் ஓய்வெடுப்பவர்களுக்கு துதி பாடும் எண்ணம் வந்துவிட்டால், மற்றவர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் கவனிக்க நேரம் இருக்காது.

நான் ஏதோ குடும்பப் பிரச்னையிலே கவனம் செலுத்துவதாக அவர் சொல்லியிருக்கிறார். குடும்பத்தை குப்பையிலே வீசிவிட்டும் போய்விடக்கூடாது. குடும்பத்துக்காக மற்றவர்களை புறம் தள்ளி விடவும் கூடாது என்பதை அறிந்தவன ்" என்ற ு கூ‌றியு‌ ள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments