Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹஜ் பயண‌ம்: திருமாவளவன் கோரிக்கை!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:17 IST)
ஹ‌ஜ் பயண‌ம் மே‌ற்கொ‌ள்ள விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய அ ரசு‌க்கு ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பா அ‌வ‌ர் இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' சவுதி அரேபியாவில் ம ெக்கா நகரில் அமைந்தள்ள காபா என்றும் இல்லத்திற்கு சென்று வழிபடுவது முஸ்லீம்களின் ஹஜ் என்னும் ஐந்தாம் கடமையாகும். தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இ‌ந்த ஆ‌ண்டு தமிழகத்திலிருந்து சுமார் 11,000 பேர் 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள அரசிடம் மனு கொடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 3,100 பேருக்கு மட்டுமே குலுக்கல் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. ஹஜ் புனித பயணத்திற்கு செல்ல விரும்பி மனு கொடுத்துள்ள அனைவருக்கும் அந்த அரிய வாய்ப்பினை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இதில் குலுக்கல் முறையை அடியோடு கைவிட்டு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புனித பயணத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசும் இதில் தலையிட்டு அனைவருக்கும் அனுமதி கிடைத்திட இந்திய அரசை வலியுறுத்த வேண்ட ு‌ம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments