Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபம் தடை தமிழகம் முழுவதும் நீக்கம்!

விஸ்வரூபம் தடை தமிழகம் முழுவதும் நீக்கம்!
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (16:43 IST)
FILE
கம‌ல் தயா‌ரி‌த்து, இய‌க்‌கி, நடி‌த்து‌ள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தமிழக அரசு நீக்கியுள்ளது.

விஸ்வரூபம் படப் பிரச்சனையில் கமலுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் நேற்று ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை அடுத்து தான் தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதாக கமல் அறிவித்தார்.

அதேபோல, இஸ்லாமிய அமைப்புகள் தாங்கள் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனையை முன்னின்று தீர்த்து வைத்த தமிழக அரசும், அனைத்து மாவட்டங்களிலும் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கியுள்ளது.

இது தொடர்பான உத்தரவு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil