Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் திமுக வேட்பாளர் பட்டியல்: கருணாநிதி

Webdunia
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவோம் என்று திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கருணாநிதி கூறியிருக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடங்கிய 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்திருப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

21 தொகுதிகளுக்கு மொத்தம் 540 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரிடமும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டு அதன் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் முதல் அமைச்சர் கூறினார்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும் என்றும அவர் கூறினார்.

இந்த தேர்தலில் சில புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கருணாநிதி கூறினார்.

பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றிக் கேட்டதற்கு, கருத்து கூற அவர் மறுத்து விட்டார். அதுபற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கருணாநிதி கூறினார்.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியன இடம்பெற்றுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments